மாநில செய்திகள்

சட்டவிரோதமாக பேனர் வைத்த வழக்கில் ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் -அரசு தரப்பு + "||" + Jayagopal will soon be arrested in case of illegal banner - Government

சட்டவிரோதமாக பேனர் வைத்த வழக்கில் ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் -அரசு தரப்பு

சட்டவிரோதமாக பேனர் வைத்த வழக்கில் ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் -அரசு தரப்பு
சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ. இவர் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சட்டவிரோதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண  ‘பேனர்’ சரிந்து விழுந்தது.

இதனால் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னால் வேகமாக வந்த லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்தபோது, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீலிடம் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். இந்த வழக்கைப் பொருத்தவரை பிரதான எதிரியான ஜெயகோபால் மீது 304(2) வழக்கு பதிவு செய்தபோதும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் ஜெயகோபால் சட்டவிரோதமாக பேனர் வைத்த நிலையில் லாரி டிரைவர் மீதான வழக்குடன் அவரைச் சேர்த்தது ஏன் எனவும் ஜெயகோபால் இங்கு இருக்கிறாரா அல்லது வெளிநாட்டுக்கு தப்பிவிட்டாரா எனவும் நீதிபதிகள் கேட்டுள்ளனர். பேனர் விவகாரத்தில் பல உத்தரவுகளை பிறப்பித்தாலும் அதை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, பள்ளிக்கரணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உதவிப் பொறியாளர், செயற்பொறியாளர் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வக்கீல் பதிலளித்தார்.

மேலும் ஜெயகோபாலைப் பிடிக்க துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது
திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
2. ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது
ராமேசுவரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளி கைது
நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
4. மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளர் கைது
மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
5. சிவகாசி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது
சிவகாசியில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.