உலக செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு : இம்ரான்கான் சொல்கிறார் + "||" + Opportunity for Indo-Pak war ; Imran khan Says

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு : இம்ரான்கான் சொல்கிறார்

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு : இம்ரான்கான் சொல்கிறார்
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.
நியூயார்க், 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

பதற்றத்தை தணிக்குமாறும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 50 நாட்களாக காஷ்மீர் மக்கள், 9 லட்சம் ராணுவ வீரர்களால் அடைத்து வைக்கப்பட்டுள்ள னர். மக்கள், கூட்டம் கூட்டமாக கைது செய்யப்படுகிறார்கள். ஆஸ்பத்திரிகள் இயங்கவில்லை. செய்தி கள் மூடி மறைக்கப்படுகின்றன.

80 லட்சம் மக்களும் திறந்தவெளி சிறையில் வைக்கப்பட்டு இருப்பது, இந்த காலத்தில் முன்எப்போதும் இல்லாதது ஆகும். ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் என்ன நடக்குமோ என்பதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அத்தகைய சூழ் நிலையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரு அணு ஆயுத நாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்தார்பூருக்கு வர சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் வேண்டாம் என கூறிய இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு
கர்தார்பூருக்கு வர இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, அடையாள அட்டை போதுமானது என கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டின் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2. இம்ரான்கான் பதவி விலக 2 நாள் கெடு - விடுதலை பேரணியில் பாகிஸ்தான் மத குரு ஆவேசம்
இம்ரான்கான் 2 நாட்களில் பதவி விலக வேண்டும் என்று விடுதலை பேரணியில் பாகிஸ்தான் மத குரு ஆவேசமாக தெரிவித்தார்.
3. சவூதி இளவரசரை கோபப்படுத்தியதால் இம்ரான் கான் ஆடம்பர விமானத்தின் வசதியை இழந்தார்
சவூதி இளவரசரை கோபப்படுத்தியதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்; ஆடம்பர விமானத்தின் வசதியை இழந்து உள்ளார்.
4. வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா-ஈரான் இடையே இம்ரான்கான் சமரசம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுசபை கூட்டத்துக்கு இடையில் இருநாடுகளும் இது குறித்து பேசி தீர்வு காணும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அதற்கான சூழல் அமைந்ததாக தெரியவில்லை.
5. சவுதி இளவரசரின் தனி விமானத்தில் அமெரிக்கா சென்ற இம்ரான்கான்
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார்.