கிரிக்கெட்

இந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ + "||" + India, Sri Lanka 20 Over cricket Series BCCI releases match schedule

இந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

இந்தியா, இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மும்பை,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

இதனையடுத்து, இலங்கை அணி வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. பிசிசிஐ தற்போது இந்த போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இப்போட்டிகளானது ஜனவரி 5 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.

அதன்படி  முதல் போட்டி ஜனவரி 5-ந் தேதி கவுகாத்தியிலும், 2-வது போட்டி ஜனவரி 7-ந் தேதி இந்தூரிலும், 3-வது போட்டி ஜனவரி 10-ந் தேதி புனேவிலும் நடைபெற உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்’ - பிரதமர் மோடி உறுதி
இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. இதில் மராட்டியத்தில் மட்டும் 70 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் குணம் அடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
4. வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம் - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து, இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம் கண்டுள்ளதாக மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
5. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தெரிவித்துள்ளார்.