தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு + "||" + Declaration of by-election date for 2 vacant seats in Rajya Sabha

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
மாநிலங்களவையில் 2 இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதற்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
புதுடெல்லி,

அருண்ஜெட்லி, ராம்ஜெத்மலானி காலமானதை அடுத்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளன. அருண்ஜெட்லி உத்தர பிரதேசத்தில் இருந்தும், ராம்ஜெத்மலானி பீகாரில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

இந்நிலையில் தற்போது காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் அக்டோபர் 16 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் பீகார் சட்டப்பேரவை மூலம் புதிய உறுப்பினர் தேர்வு நடைபெறும்.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கும். அக்டோபர் 4 ஆம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி தேதியாகும். தாக்கல் செய்யப்பட்ட  மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல் - நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. இதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
2. இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கான காரணம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் -மத்திய மந்திரி அமித்ஷா
மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய மந்திரி அமித்ஷா கூறி உள்ளார்.
4. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்?
எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: கர்நாடகத்தில் இன்று மனுத்தாக்கல் தொடக்கம்
கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.