தேசிய செய்திகள்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Special status cancellation for Kashmir: Central government has 4 weeks to file a reply - Supreme Court order

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம் தொடர்பான வழக்குகளில், மத்திய அரசு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் அனைத்தையும் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு 28-ந் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரிக்க நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வை நேற்று சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது.

இந்த அமர்வின் முன்பு நேற்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வக்கீல் எம்.எல்.சர்மா, பரூக் அகமது தர், ஷகீர் ஷபீர், சோயப் குரேஷி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் முகமது அக்பர் லேன், இந்தர் சலீம், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பசல், அரசியல் செயல்பாட்டாளர் ஷெலா ரஷீத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் எம்.ஒய்.தரிகாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒவ்வொரு வழக்கின்மீதும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது என்று முறையிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அனைத்து வழக்குகள் மீதும் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காஷ்மீர் மாநில அரசுக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கினார்கள். மேலும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ததும், வழக்குதாரர்கள் ஒரு வாரத்தில் எதிர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

வழக்கின் விசாரணையை நவம்பர் 14-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

விசாரணையின் போது காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இனி புதிதாக எந்த வழக்கும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது; இந்த விவகாரத்தில் ஒரு லட்சம் வழக்குகளை தாக்கல் செய்வதால் எந்த பயனும் இருக்காது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறையில் தள்ளுவோம் - பா.ஜனதா எச்சரிக்கை
காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறையில் தள்ளுவோம் என பா.ஜனதா எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன? என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.
3. காஷ்மீர்: சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
காஷ்மீரில் சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4. காஷ்மீரில் செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மக்கள் கொண்டாட்டம் - உறவுகளுக்கு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறினர்
72 நாட்களுக்குப்பிறகு செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த காஷ்மீர் மக்கள், தங்கள் உறவுகளை தொடர்பு கொண்டு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.
5. 70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது
சுமார் 70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது. எனினும் இணையதளங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.