உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் காந்தி தபால் தலை வெளியீடு + "||" + Gandhi Stamp Issue in Palestine

பாலஸ்தீனத்தில் காந்தி தபால் தலை வெளியீடு

பாலஸ்தீனத்தில் காந்தி தபால் தலை வெளியீடு
பாலஸ்தீனத்தில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியிடப்பட்டது.
காத்மாண்டு,

தேசப்பிதாவான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நேற்று இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாலஸ்தீனத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த தபால் தலையை பாலஸ்தீன தொலைத்தொடர்பு துறை மந்திரி வெளியிட்டார்.


இதேபோல், நேபாளத்திலும் காந்தி பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள காத்மாண்டு நகரில் காந்தியின் சிலை நேற்று திறக்கப்பட்டது. இந்த சிலையை நேபாளத்துக்கான இந்திய தூதர் மன்ஜிவ் சிங் பூரி திறந்து வைத்தார்.

சீனாவில் சீன சிற்பி யுவான் ஜிகுன் உருவாக்கிய காந்தி சிலை பீஜிங்கில் உள்ள சாயோங் பூங்கா அருகே கடந்த 2005-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அன்று முதல் காந்தியின் பிறந்தநாள் விழா அங்கேயே கொண்டாடப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காந்தியின் பிறந்தநாளை அங்கு கொண்டாட சீன அரசு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் நடந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் பரமஹம்ச யோகானந்தாவின் நினைவாக ரூ.125 மதிப்பிலான நாணயம் வெளியீடு
டெல்லியில் பரமஹம்ச யோகானந்தாவின் நினைவாக ரூ.125 மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டு உள்ளது.
2. தேசிய அஞ்சல் வார நிறைவு விழாவில் பழங்கால ‘ரன்னர்’ முறை சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
தேசிய அஞ்சல் வார நிறைவு விழாவில் பழங்கால ‘ரன்னர்’ முறை சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
3. நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் டிரெய்லர் டுவிட்டரில் வெளியீடு
நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் டிரெய்லர் டுவிட்டரில் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது.
4. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாடு: அமெரிக்க பெண் எம்.பி.க்களுக்கு இஸ்ரேல் பயண தடை
அமெரிக்க பெண் எம்.பி.க்களுக்கு இஸ்ரேல் பயண தடை விதித்துள்ளது.
5. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ல் வெளியீடு
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.