உலக செய்திகள்

பிரான்ஸ் நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு + "||" + Mahatma Gandhi's Postage Issued in France

பிரான்ஸ் நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு

பிரான்ஸ் நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரான்சில் காந்தியின் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
பாரிஸ்,

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா நேற்று இந்தியா மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டு நகரில் காந்தியின் சிலையை நேபாளத்துக்கான இந்திய தூதர் மன்ஜிவ் சிங் பூரி திறந்து வைத்தார். சீனாவின் இந்திய தூதரகத்தில் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பாலஸ்தீனத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்த்து இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரான்ஸ் நாட்டின் தபால் சேவை நிறுவனமான லா போஸ்டே, மகாத்மா காந்தியின் உருவப்படத்தைக் கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.

உஸ்பெகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் கொண்ட சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மாஸ்கோவில் காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை
மாஸ்கோவில் உள்ள காந்தி சிலைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
2. பிரான்சில் லாரியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகள் சிக்கினர்
பிரான்சில் லாரியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் சிக்கினர்.
3. பிரான்ஸ் நாட்டில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம்
பிரான்ஸ் நாட்டில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. தேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி - பா.ஜனதா எம்.பி. பிரக்யாவின் மற்றொரு சர்ச்சை கருத்து
தேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி என பா.ஜனதா எம்.பி.யான பிரக்யா சிங் மற்றொரு சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.
5. காந்திய வழியை பின்பற்றுங்கள், பிறகு அவரைப் பற்றி பேசலாம்: பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி
மகாத்மா காந்தி காட்டிய உண்மை வழியில் பாஜக முதலில் நடக்கட்டும் பிறகு அவரைப் பற்றி பேசலாம் என்று பிரியங்கா காந்தி விமர்சித்தார்.