மாநில செய்திகள்

‘தமிழ்’ புகழ் பாடும் பிரதமர் “தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற செய்யும் முயற்சியாக இருக்கலாம்” கமல்ஹாசன் சொல்கிறார் + "||" + In TamilNadu Attempt to overthrow the BJP Says Kamal Haasan

‘தமிழ்’ புகழ் பாடும் பிரதமர் “தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற செய்யும் முயற்சியாக இருக்கலாம்” கமல்ஹாசன் சொல்கிறார்

‘தமிழ்’ புகழ் பாடும் பிரதமர் “தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற செய்யும் முயற்சியாக இருக்கலாம்” கமல்ஹாசன் சொல்கிறார்
‘பிரதமர் நரேந்திர மோடி ‘தமிழ்’ புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார், இது தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க.வின் முயற்சியாக இருக்கலாம்’, என்று கமல்ஹாசன் கூறினார்.
சென்னை,

சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நல்ல திட்டங்கள் பற்றி அரசிடம் கோரிக்கை வைக்கலாமே? என்று கேட்கிறார்கள். இந்த அரசிடம் என்ன கோரிக்கைகள் வைத்தாலும் எதுவும் நிறைவேறப்போவதில்லை. வைக்காத கோரிக்கைகள் என்ன இருக்கிறது? என்பதே என் கேள்வி. வாய் சொல்லில் வீரர்களாக இருக்கிறார்கள். திட்டங்களை பெயருக்கு தொடங்கி பின்பு கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் அழுகிய முட்டை போடுகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட கோழியோ அல்லது சேவலோ பொறுப்பாக முடியுமா?


பகவத் கீதையை பாடமாக்கலாமா? ‘கட்சியை ஒரு துரித உணவகம் போல நடத்துகிறார்’, என்று அமைச்சர் ஜெயக் குமார் என்னை விமர்சித்து இருக்கிறார். அவர்களும் என்னை போல ஒரு உணவகத்தை தான் நடத்துகிறார்கள். எனவே போட்டி, பொறாமை காரணமாக இதை சொல்லி இருக்கலாம். நான் அவர்களை ஒரு வியாபாரிகளாகவே பார்க்கிறேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தேவையா? இது கலாசார சீரழிவு என்றும் கூறியிருக்கிறார். ‘இந்த ஆட்சியும் அப்படித்தான் இருக்கிறது’, என்பதை பதிலாக அளிக்கிறேன் நான்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை பாடமாக கொண்டுவந்தது தேவையில்லாதது. படிப்பு முடிந்ததும் தனக்கு தேவையான பிற விஷயத்தை மாணவர்களே தேர்வு செய்துகொள்வார்கள். அதை கல்விக் கூடத்தில் கொண்டுவரக் கூடாது.

பிரதமர் நரேந்திர மோடி ‘தமிழ்’ புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார், இது தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற செய்யும் முயற்சி என்கிறார்கள், இருக்கலாம். அதில் தவறில்லையே... நாகலாந்து சென்றால் அந்த ஊர் தொப்பி அணிந்து கொண்டு ஆடுவதில்லையா? அதுபோல நமது பெருமையையும் தூக்கி சிறிது நாட்கள் தலையில் வைத்துக்கொள்ளட்டுமே... இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மழைநீரை சேமிக்க எந்த வழிமுறைகளையும் அரசு செய்யவில்லை கனிமொழி எம்.பி. பேட்டி
தமிழகத்தில் மழைநீரை சேமிக்க எந்த வழிமுறைகளையும் அரசு செய்யவில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
2. தமிழகத்தில் சர்க்கரை தொழிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் நிர்மலா சீதாராமனுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
தமிழகத்தில் சர்க்கரை தொழிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமனுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
3. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை தீவிரமடையும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்த இரு தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - விக்கிரவாண்டி 84 சதவீதம், நாங்குநேரி 66 சதவீதம்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்தது. நாங்குநேரியில் 66.35 சதவீத வாக்குகளும், விக்கிரவாண்டியில் 84.36 சதவீத வாக்குகளும் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.
5. அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் மழை தீவிரம் அடைகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 14 செ.மீ. மழை பெய்து உள்ளது.