தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பா.ஜனதா-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு + "||" + Maharashtra Assembly Elections: BJP to contest in 148 seats, Shiv Sena 126, allies 14

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பா.ஜனதா-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பா.ஜனதா-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜனதா - சிவசேனா கூட்டணியும் மோத உள்ளன. சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே போட்டியிட உள்ளார்.


இந்நிலையில் முதல் மந்திரி வேட்பாளரும், பா.ஜனதா தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அந்த சந்திப்பில், சட்டசபை தேர்தல் குறித்த தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதன்படி பா.ஜனதாவுக்கு 148 தொகுதிகளும், சிவசேனா கட்சிக்கு 126 தொகுதிகளும், பிற கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.
2. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட நவ.16-ந் தேதி முதல் விருப்பமனு
உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட நவம்பர் 16-ந் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை - சமூக நல்லிணக்கத்தை காக்க இருதரப்பும் வேண்டுகோள்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பதையொட்டி முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். சமூக நல்லிணக்கத்தை காக்க இருதரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. போக்குவரத்து விதிமீறல்: பா.ஜனதா முன்னாள் மந்திரிக்கு ரூ.4000 அபராதம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பா.ஜனதாவின் முன்னாள் மந்திரி விஜய் கோயலுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
5. சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ. கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்கமாட்டோம் பா.ஜனதா உறுதி
சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ. கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்கமாட்டோம் என்று பா.ஜனதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.