மாநில செய்திகள்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Rain in the inner parts of Tamil Nadu - Chennai Meteorological Department

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிவடைந்த நிலையில், சில பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வெப்ப சலனம் காரணமாக பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா? பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்
டேபிள் டாப் விமான நிலையங்களில் ஓடுதளத்திற்குள் விமானத்தை நிறுத்த முடியாவிட்டால், அதை மீறி விமானம் ஓடுவதற்கு இடம் இல்லை என்பது ஆபத்தான விஷயம்
2. சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை
மும்பையில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் நேற்று முன்தினம் இரவு வரை 3 நாட்களாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
3. மும்பையில் சூறாவளி காற்றுடன் 3-வது நாளாக மழை 2 மின்சார ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின 200 பயணிகள் மீட்பு
மும்பையில் சூறாவளி காற்றுடன் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் 2 மின்சார ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின.
4. அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலைப்பகுதி மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
5. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.