மாநில செய்திகள்

தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ‌ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிலைகள் மீட்பு + "||" + Two statues missing from Tanjore Rajagopalaswamy temple 69 years ago were recovered

தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ‌ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிலைகள் மீட்பு

தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ‌ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிலைகள் மீட்பு
69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தஞ்சை அழகர் மற்றும் திருப்புராந்தகர் சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக் கூடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்,

தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட மிகவும் பழமையான சிலைகளை  ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெற்றிகரமாக மீட்டு வந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து களவாடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் மீட்டு கொண்டு வந்தனர். 

இதனை தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலையுடன் காணாமல் போன 61 சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படும் தஞ்சை அழகர் மற்றும் திருப்புராந்தகர் சிலைகள், தஞ்சை அரண்மனை கலைக் கூடத்தில் இருப்பதாக இந்தக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், 56 கிலோ எடை கொண்ட திருப்புராந்தகர் சிலையையும், 61 கிலோ எடை கொண்ட தஞ்சை அழகர் சிலையையும் மீட்டனர்.  மீட்கப்பட்ட சிலைகள் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், கலைக்கூடத்திற்கும் சிலை திருட்டுக்கும் சம்மந்தம் இல்லை என்றும் சிலைகள் கலைக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மீட்கப்பட்ட சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அதற்கு சொந்தமான கோவிலில் வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திர பிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் 2,739 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
ஆந்திர பிரதேசத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்த 2,739 பேர் கடந்த 3 நாட்களில் மீட்கப்பட்டு உள்ளனர்.
2. திருச்சியில் குப்பை கொட்ட சென்ற 9ம் வகுப்பு மாணவி உடல் கருகிய நிலையில் மீட்பு
திருச்சியில் குப்பை கொட்ட சென்ற 9ம் வகுப்பு மாணவி உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
3. கும்பகோணம் அருகே கோவிலில் கொள்ளை போன சாமி சிலைகள் மீட்பு ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் கைது
கும்பகோணம் அருகே கோவிலில் கொள்ளை போன 3 சாமி சிலைகள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் கைது
சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. திருச்சி அருங்காட்சியகத்தில் சிலைகள் திருட்டு: சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தவர் கைது
திருச்சி அருங்காட்சியகத்தில் சிலைகள் திருட்டுப்போன வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர் சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தார். அவர் சொந்த ஊருக்கு வந்தபோது திருச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.