மாநில செய்திகள்

திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது 4¾ கிலோ நகைகள் மீட்பு + "||" + In Trichy In the case of jewelery robbery 2 arrested including woman

திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது 4¾ கிலோ நகைகள் மீட்பு

திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது 4¾ கிலோ நகைகள் மீட்பு
திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4¾ கிலோ தங்க நகைகளை மீட்கப்பட்டுள்ளன.
திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2-ந் தேதி அதிகாலை இந்த கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு கொள்ளையர்கள் 2 பேர் உள்ளே புகுந்து 30 கிலோ எடை கொண்ட ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், 7 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டனை (வயது 34) போலீசார் பிடித்தனர். அப்போது போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் (28) தப்பி ஓடினான். மணிகண்டனிடம் இருந்து 4 கிலோ 250 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நகைகள் அனைத்தும் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவந்தது.

மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ் (28) உள்பட 8 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கொள்ளையடித்த நகைகளை பங்கு பிரித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது சிக்கி கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷை பிடிக்க போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு சுரேஷ் இல்லை.

அங்கிருந்த சுரேஷின் தாய் கனகவள்ளியை (57) பிடித்து விசாரித்தபோது, கொள்ளையடித்த நகைகளில் 450 கிராமை அவர் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மணிகண்டன், கனகவள்ளி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் திருவாரூரில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இருவரையும் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டார்.

இதையடுத்து மணிகண்டன் திருச்சி மத்திய சிறையிலும், கனகவள்ளி காந்திமார்க்கெட் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்: கல்லூரி மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி செல்போன்கள் பறிப்பு
திருச்சியில் சினிமா பாணியில் கல்லூரி மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்த 10 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. திருச்சியில் பயங்கரம் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை கடைகள் அடைப்பு; பதற்றம்
திருச்சி பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் காந்திமார்க்கெட் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியது.
3. திருச்சியில் ஆதரவற்று சுற்றி திரிபவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் காவலர்
திருச்சியில் பணியாற்றி வரும் காவலர், ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு முடித்திருத்தம் செய்து, வேறு ஆடைகளை உடுத்தி உணவு வழங்குகிறார்.
4. திருச்சியில் கொடூரம்: சிறுவனை அடித்துக்கொன்று குப்பை மேட்டில் உடல் புதைப்பு
திருச்சியில் சிறுவனை அடித்துக்கொன்று குப்பை மேட்டில் உடலை புதைத்தனர்.
5. திருச்சியில் மீண்டும் துணிகர சம்பவம்: ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை - மர்ம நபர் கைவரிசை
திருச்சியில் பாய்லர் ஆலை வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளையடிக்கப்பட்டது. குல்லா அணிந்து வந்து கைவரிசை காட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.