மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை + "||" + About 2,951 people diagnosed with dengue fever across Tamil Nadu

தமிழ்நாடு முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை

தமிழ்நாடு முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை
தமிழ்நாடு முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ராயபுரம்,

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் பலருக்கு அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் உள்ள வார்டுகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது, “தமிழ்நாடு முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற வகையில் செயல்படுவது தான் அரசின் இலக்கு.

டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் முதல் ஐந்து நாட்கள் வரை பெரிய அளவில் பாதிப்பு இருக்காது, ஐந்து நாட்களுக்குப் பிறகு தான் பாதிப்பு ஏற்படும். அதனால் அதற்குள் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

சென்னையை பொறுத்தவரை வடசென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
டெங்கு காய்ச்சலால் இதுவரை தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்”என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 20 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றம் - ரெயில்வே நடவடிக்கை
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 20 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு - அதிகபட்சமாக ஈரோட்டில் 24 பேரை தாக்கியது
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 67 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேரை இந்த நோய் தாக்கியுள்ளது.
3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு மெஸ்சி, ரொனால்டோ உதவி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு மெஸ்சி, ரொனால்டோ உதவி செய்துள்ளனர்.
4. தஞ்சையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு: மருந்து கடைகளை நோக்கி மக்கள் படையெடுப்பு
தஞ்சையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் மருந்து கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்கின்றனர்.
5. தமிழ்நாட்டில் 7 லட்சத்து 73 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன - மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 7 லட்சத்து 73 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக, மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.