தேசிய செய்திகள்

டென்மார்க்கில் பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு + "||" + Kejriwal refuses central government permission to attend climate change conference in Denmark

டென்மார்க்கில் பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

டென்மார்க்கில் பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
கெஜ்ரிவால், டென்மார்க்கில் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது.
புதுடெல்லி,

டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் ‘சி40’ என்னும் பருவநிலை மாற்ற மாநாடு இன்று (9-ந்தேதி) தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கோபன்ஹேகன் செல்ல இருந்தார்.


ஆனால் கெஜ்ரிவால் செல்வதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது.

இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் கூறியதாவது:-

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் நகரில் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால், மத்திய அரசிடம் அனுமதி கோரி இருந்தார்.

ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.

கெஜ்ரிவால் விடுமுறையை கழிப்பதற்காக அங்கு செல்லவில்லை. 100 நகர மேயர்கள் கலந்து கொள்கிற பருவநிலை மாற்ற மாநாட்டில்தான் கலந்து கொள்ள இருந்தார்.

மாசுவை கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் சிறந்த பார்வையை அவர் அந்த மாநாட்டில் முன் வைத்திருப்பார். அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது.

முதல்-மந்திரியின் எத்தனை உத்தியோகப்பூர்வமான பயணங்கள் ரத்தாகி உள்ளன? கடந்த மாதமே நாங்கள் அனுமதி கோரியும் இப்போது மறுக்கப்பட்டிருக்கிறது.

அவர் இந்த மாநாட்டில் முக்கிய உரை ஆற்ற இருந்தார். அத்துடன் டென்மார்க்கில் கார்பன் உமிழ்வு பற்றிய அமர்விலும் கலந்து கொள்ள இருந்தார்.

நியூயார்க், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், பெர்லின் மேயர்களுடன் பருவ நிலை மாற்றம் குறித்து விவாதித்தும் இருப்பார்.

ஆனால் இப்போது அனுமதி தரப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு துறை காலி பணியிடங்களில் அங்கன்வாடி ஊழியர்களை நியமிக்க வேண்டும் சங்க மாநாட்டில் தீர்மானம்
அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களில் அங்கன்வாடி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் பள்ளி மாணவர் மாநில மாநாட்டில் தீர்மானம்
தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளி மாணவர் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தினர்.
4. போடிமெட்டு மலைப்பாதை விபத்தில் மேலும் ஒருவர் சாவு அதிக பயணிகளுடன் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு
போடிமெட்டு மலைப்பாதையில் பள்ளத்தில் ஜீப் பாய்ந்த விபத்தில் மேலும் ஒருவர் நேற்று இறந்தார். விபத்து சம்பவத்தை தொடர்ந்து அதிக பயணிகள் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
5. கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதி மறுப்பு
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மற்ற ஜோடிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.