கிரிக்கெட்

சிறு குழந்தையின் நடைகள்... காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா + "||" + Hardik Pandya begins his journey to recovery after lower back surgery

சிறு குழந்தையின் நடைகள்... காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா

சிறு குழந்தையின் நடைகள்... காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டிக்கு பிறகு முதுகின் அடிப்பகுதியில் காயம் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக இருந்து வரும் இந்த பிரச்சினை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினர் அவருக்கு ஆபரேஷன் செய்வது தான் சரியான தீர்வாக இருக்கும் என்று சிபாரிசு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து லண்டன் சென்ற ஹர்திக் பாண்ட்யாவுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 4ந்தேதி ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாகவும், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கான உடற்பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் நடந்து இருக்கும் தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் ஹர்திக் பாண்ட்யா, விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று தெரிகிறது.

எனினும், ஹர்திக் காயத்தில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.  இதுபற்றி வீடியோ பதிவு ஒன்றை அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.  அதில், சிறு குழந்தையின் நடைகள்... ஆனால் முழு உடற்தகுதிக்கான எனது பயணம் இங்கிருந்தே தொடங்குகிறது.  எனக்கு ஆதரவாக இருந்த மற்றும் நான் நலம் பெற விரும்பிய ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுவலி பிரச்சினை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் ஹர்திக் தேர்வு செய்யப்படவில்லை.  வருகிற நவம்பர் 3ந்தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள வங்காளதேச அணிக்கு எதிரான சர்வதேச 20 ஓவர் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. காயத்தால் அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா - வங்காளதேச தொடரில் ஆட முடியாது
காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அவதிப்பட்டு வருகிறார். இதனால் வங்காளதேச தொடரில் ஆட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
2. ஆள் இல்லாத சக்கர நாற்காலி தானாக நகர்ந்து சாலையில் சென்றது
மருத்துவமனையின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சக்கர நாற்காலி ஒன்று தானாகப் புறப்பட்டு சாலையில் சென்று நின்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
3. "மூன் வாக்" வீடியோ வைரலானதையடுத்து சாலை உடனடியாக சீரமைப்பு
பெங்களூருவில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட "மூன் வாக்" வீடியோ வைரலானதையடுத்து, அந்த சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
4. லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை காப்பாற்றிய சிறுமி - வீடியோ
லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை சிறுமி ஒருவர் காப்பாற்றி பாராட்டை பெற்று உள்ளார்.
5. பஸ்சுக்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண் ; ஆ... என வேடிக்கை பார்த்த டிரைவர் சஸ்பெண்ட்
பஸ்சுககுள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்ணை ஆ... என வேடிக்கை பார்த்து கொண்டிருந்த டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.