மாநில செய்திகள்

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் + "||" + MK Stalin campaign in support of Nanguneri Congress candidate

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்
நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாங்குநேரி,

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று நாங்குநேரியில் பல கிராமங்களில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “ஆளும் கட்சியினர்தான் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும், ஆனால் எதிர்கட்சியாகிய நாங்கள் தான் ஆளும் கட்சி செய்ய வேண்டிய பணியை செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

இன்றும் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். நொச்சிக்குளம், கிருஷ்ணாபுரம் பகுதியில்  திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களுடன் கலந்துரையாடிய அவர், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த அவர் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறினார்.

நொச்சிகுளத்தில் பேசிய போது, கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாமல் இருந்து வருவதாக விமர்சித்தார்.  நாங்குநேரி தொகுதி கிருஷ்ணாபுரத்தில் பேசுகையில், “சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பற்றி கவலைப்படாத இந்த அரசுக்கு பாடம் புகட்டுங்கள்” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம்
தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. கொரோனா காலத்தில் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான அறிக்கை எதுவும் கொடுக்கவில்லை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
கொரோனா காலத்தில் அதை தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான அறிக்கைகள் எதுவும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
4. மேட்டூர் அணையை 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு காவிரி நீர் போய் சேராதது கவலை அளிக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை
மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு இன்னும் காவிரி நீர் போய் சேராதது கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி: அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-