தேசிய செய்திகள்

அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது உண்மையே விசாரணை அறிக்கையில் தகவல் + "||" + From the Agrahara Prison In violation of the rule Sasikala went out It is true Information on the investigation report

அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது உண்மையே விசாரணை அறிக்கையில் தகவல்

அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது உண்மையே விசாரணை அறிக்கையில் தகவல்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பெங்களூரு

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அவருக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் கூறப்பட்டன.

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரூபா நியமிக்கப்பட்டார். ரூபா பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கைதிகளிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார்.

பின்னர் அவர் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சசிகலாவுக்கு தனி சமையலறை அமைத்து கொடுத்திருந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சசிகலாவுக்கு சில சிறப்பு வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதும் அதிகாரி ரூபாவின் கவனத்திற்கு வந்தது.

இதுதொடர்பாக அதிகாரி ரூபா, விவரமாக ஒரு அறிக்கையை தயாரித்து கடந்த 12-ந் தேதி சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா ஆகியோருக்கு அனுப்பிவைத்தார். இதில் சசிகலாவுக்கு தனி சமையலறை மற்றும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சசிகலாவிடம் இருந்து டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு, கட்டில் மெத்தை, டெலிவிஷன் பெட்டி, தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும். சசிகலா சிறையில் இருந்து சல்வார் கமீஸ் உடை அணிந்து கையில் பையுடன் சென்று வரும் வீடியோ இடம் பெற்று இருந்தது. இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடு புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது.

 பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என  விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்ததாக வெளியான தகவலும் உண்மையே  என விசாரனை அறிக்கை தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இரட்டை இலை சின்னம் வழக்கு; சசிகலா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக வி.கே.சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
2. சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்; சசிகலா எங்களுடன் தான் இருக்கிறார்- டிடிவி தினகரன்
சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்; சசிகலா எங்களுடன் தான் இருக்கிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
3. நீலாங்கரை கடற்கரை அருகே உள்ள சசிகலா அக்கா மகன் வீட்டை இடிக்க தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
நீலாங்கரை கடற்கரை அருகே கட்டப்பட்டுள்ள சசிகலாவின் அக்கா மகன் வி.பாஸ்கரனின் வீட்டை இடிக்க மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. சசிகலாவின் அக்கா மகன் வி.பாஸ்கரன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
4. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது சசிகலா ரூ.168 கோடிக்கு ‘பினாமி’ சொத்துகள் வாங்கியது உண்மை - ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்
ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, சசிகலா ரூ.168 கோடிக்கு ‘பினாமி’ சொத்துகள் வாங்கியது உண்மை என சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை கூறியுள்ளது.
5. 500, 1,000 ரூபாய் செல்லாத நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை - வருமான வரித்துறை மும்முரம்
செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது.