சினிமா செய்திகள்

"நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு நடிக்கவில்லை" நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் + "||" + Producer Gnanavel Raja complains to actor Simbu

"நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு நடிக்கவில்லை" நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்

"நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு நடிக்கவில்லை" நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்
'மப்டி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு படத்தில் நடிக்கவில்லை என நடிகர் சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.
சென்னை

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற மப்டி படதமிழ் ரீமேக்கை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கைப்பற்றியிருந்தார். ஸ்ரீ முரளி நடித்த கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கும், ஷிவ ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடித்து வந்தனர்.

ஆனால்  சிம்பு தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலாவுக்காகச் சென்றுவிட்டதால் ஷூட்டிங் பாதியில் நின்று இருந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மீண்டும் சென்னை திரும்பிய சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதனால்  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிம்புவை மப்டி படத்திலிருந்து நீக்கியுள்ளதாகவும், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் 'மப்டி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு படத்தில் நடிக்கவில்லை என நடிகர் சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம்  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்து உள்ளார்.

அதில், பெங்களூருவில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் சிம்பு சரியாக வரவில்லை என்றும், வந்தாலும் 4 மணி நேரம் மட்டுமே இருந்துள்ளார். மேலும் அடுத்தக்கட்டப் படப்பிடிப்புக்காகத்  தேதிகள் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் தனக்கு பணம் நஷ்டம் அடைகிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மப்டி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதால், படத்தைக் கைவிடவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரெயில் நிலையத்தில் இறந்த புலம்பெயர்ந்த பெண்ணின் குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உதவி
ரெயில் நிலைய நடைமேடையில் புலம் பெயர்ந்த பெண் ஒருவர் இறந்து கிடக்க அது தெரியாமல் எழுப்ப முயன்ற குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உதவி செய்துள்ளார்.
2. வடிவேலு குறித்து சிங்கமுத்து பேசியது என்ன? மன்னிப்பு கேட்ட மனோபாலா
நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் நடிகர் வடிவேலு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
3. இளைஞர்கள் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை பரிந்துரைத்த விவேக்
இளைஞர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை நடிகர் விவேக் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
4. நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார்
நடிகர்கள் சிங்க முத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் வடிவேலு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
5. பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் மரணம்
பாலிவுட்டில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் ( வயது 42) சீறுநிரக தொற்று காரணமாக காலமானார் .