மாநில செய்திகள்

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை எதிரொலி: மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் 2 கடற்படை கப்பல்கள் + "||" + In the process of security 2 Naval Ships

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை எதிரொலி: மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் 2 கடற்படை கப்பல்கள்

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை எதிரொலி: மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் 2 கடற்படை கப்பல்கள்
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு மாமல்லபுரம் பகுதியில் 2 கடற்படை கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
மாமல்லபுரம்,

சீன அதிபருக்கு பல்வேறு தீவிரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு இந்த மிரட்டல் கடி தம் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

சீன பாதுகாப்பு அதிகாரிகளும், மத்திய பாதுகாப்பு குழுவினரும் தங்களது கண்காணிப்பை பல மடங்கு அதிகரித்துள்ளனர். இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் சோதனை நடத்த கூடுதல் போலீசார் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் தங்கியுள்ள திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் சேலையூரில் 8 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று திபெத் பேராசிரியர் ஒருவரும் கைதானார். திபெத்தியர்களின் எதிர்ப்பால் சீன அதிபரின் வருகையின் போது எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்படுகின்றனர்.

இந்த நிலையில் தீவிரவாதிகள் பெயரில் வந்துள்ள மிரட்டல் கடிதம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் பெயரில் இந்த கடிதம் எழுதப்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு அதிகாரிகள் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்வில்லை. சீன அதிபரின் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதற்காக மாமல்லபுரத்தில் 800 கேமராக்களை நிறுவி அதன் மூலமும் கண்காணித்து வருகிறார்கள். காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மிரட்டல் கடிதத்தை எழுதிய நபர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிப்பதற்கும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர்.

இவர்களுடன் 200க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு சோதனை பிரபல சிற்பக்கூடங்கள், பூங்கா, குடவரை கோயில்கள் இருக்கும் மலைப்பகுதி, கடற்கரை, மேம்பாலம் மற்றும் புலிக்குகை, பிடாரரதம் என அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதணை நடத்தி வருகிறார்கள். மாமல்லபுரம் நகரின் உள்ளே வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களும் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில்,  பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு மாமல்லபுரம் பகுதியில் 2 கடற்படை கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடி- சீன அதிபர் வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.