தேசிய செய்திகள்

ரபேல் விமானத்துக்கு பூஜை: விமர்சனம் செய்த காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம் + "||" + Home Minister Amit Shah in Kaithal

ரபேல் விமானத்துக்கு பூஜை: விமர்சனம் செய்த காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்

ரபேல் விமானத்துக்கு பூஜை: விமர்சனம் செய்த காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்
ரபேல் விமானத்துக்கு பூஜை செய்த விவகாரத்க்தில் எதை விமர்சிக்க வேண்டும், எது விமர்சிக்க கூடாது என்பதை சிந்திக்க வேண்டும் காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் சென்றார். அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்த ராஜ்நாத் பின்னர், ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைக்கு சென்றார்.

பின்னர் முதல் விமானத்தை, பிரான்சில் ராஜ்நாத் சிங் பெற்று கொண்டார். முன்னதாக ரபேல் விமானத்திற்கு ராஜ்நாத் சிங் சாஸ்திர பூஜை செய்தார். ரபேல் விமானத்திற்கு சந்தனப் பொட்டு வைத்து, முன் பகுதியில் தேங்காய், பூக்கள் வைத்து, ஓம் என்று இந்தியில் ராஜ்நாத் சிங் எழுதினார்.

ரபேல் விமானத்துக்கு கயிறு கட்டிய பின், டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறும் போது, 

ரபேல் விமானத்தை வைத்து மத்திய அரசு நாடகம் நடத்துகிறது. இதுபோன்ற தமாசு தேவையில்லை. போபர்ஸ் போன்ற பீரங்கிகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற நேரில் சென்று அமைச்சர்கள் வாங்கியதில்லை. இதுபோன்ற பூஜை எதுவும் செய்ததில்லை. ரபேல் விமானங்கள் தரமானவையா அல்லது மோசமானதா என்பதை நான் கூற முடியாது. விமானப்படை அதிகாரிகள் தான் கூற முடியும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

அரியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்  உள்துறை மந்திரி  அமித் ஷா பேசினார். அப்போது காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். அமித்ஷா பேசும் போது கூறியதாவது:-

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பிரான்சில் ரஃபேலின் 'சாஸ்திரா பூஜை' நடத்தினார். காங்கிரஸ் அதை விரும்பவில்லை. விஜயதசமியில் 'சாஸ்திரா பூஜை' செய்யப்படவில்லையா? எதை விமர்சிக்க வேண்டும், எது செய்யக்கூடாது என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்
விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் நூதனமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார்?
ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
3. கெஜ்ரிவாலின் சவாலுக்குத் தயார் - அமித் ஷா
அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு தான் தயார் என்றும், நேரத்தையும் இடத்தையும் சொல்லுங்கள் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
4. காங்கிரசில் இருந்து முன்னாள் எம்.பி. நீக்கம்
காங்கிரசில் இருந்து முன்னாள் எம்.பி. நீக்கப்பட்டார்.
5. இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக மாறி உள்ளது -ராகுல்காந்தி குற்றச்சாட்டு
இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக கருதப்படுகிறது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.