உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் - சீன அதிபர் + "||" + Xi Jinping Says Hes Watching Kashmir Will Back Pak On Core Interests

காஷ்மீர் விவகாரம் : இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் - சீன அதிபர்

காஷ்மீர் விவகாரம் : இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம்  தீர்க்க வேண்டும் - சீன அதிபர்
காஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளார்.
பீஜிங்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு  கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச  பிரச்சினையாக்க முயற்சித்த பாகிஸ்தான், அதில் தோல்வி அடைந்தது. சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வந்தது.

கடந்த மாதம் நடைபெற்ற ஐநா பொதுக்குழுவில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா பாகிஸ்தானுக்கு உதவிசெய்தது.

இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது சீன அதிபர்  ஜி ஜின்பிங்  காஷ்மீரின் நிலைமையைக் கவனித்து வருவதாகவும், அதன் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கப்படும்  என்று கூறியதாக  அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், இந்த நிலைமையின்  சரியானதும் தவறும் தெளிவாக உள்ளது. இரு நாடுகளும் அமைதியான  பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்க்க வேண்டும் என்று கூறியதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் -இம்ரான் கான்
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் என்று பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.
2. கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங், கிண்டி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு புறப்பட்டார்.
3. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்தடைந்தார்.
4. சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக தனி விமானத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வந்தடைந்தார்.
5. சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு
சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.