உலக செய்திகள்

குர்து படைகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை துருக்கிப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்தன? + "||" + Kurds in Syria Brace for War as Turkey Says Incursion Is Imminent

குர்து படைகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை துருக்கிப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்தன?

குர்து படைகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை துருக்கிப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்தன?
குர்து படைகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட, துருக்கிப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்காரா

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகிறது. 

சிரியாவில் குர்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக துருக்கி ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றது.

சிரியாவில் தனது இராணுவ தாக்குதலை 'விரைவில்' தொடங்கப்போவதாக துருக்கி தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் குர்து படைகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட, துருக்கிப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''குர்து கிளர்ச்சிப் படைகள் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக துருக்கிப் படைகள் சிரியாவுக்கு நுழைந்துள்ளன. இதனை துருக்கி ராணுவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

"மனிதாபிமான பேரழிவிற்கு" வழிவகுக்கும் அண்டை நாடான துருக்கியின் உடனடி ராணுவ நடவடிக்கையை "எதிர்க்க" சிரியாவின்  குர்துகள்  எல்லைக்குச் செல்ல பொதுமக்களுக்கு "பொது அணிதிரட்டல்" அழைப்பை வெளியிட்டு உள்ளன.

இந்த நிலையில் துருக்கியின் எல்லைப்புறத்தில் ஈரான் படைகள் ராணுவப் பயிற்சி மேற்கொண்டுள்ளன. இதன் காரணமாக ஈரான் - சிரியா - துருக்கி எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது.