மாநில செய்திகள்

1956ஆம் ஆண்டு சென்னை வந்த சீன அதிபர் நடிகை பத்மினியின் நாட்டியத்தை கண்டுகளித்தார் + "||" + Chinese prisident 1956 year from Chennai The actress saw Padmini's dance

1956ஆம் ஆண்டு சென்னை வந்த சீன அதிபர் நடிகை பத்மினியின் நாட்டியத்தை கண்டுகளித்தார்

1956ஆம் ஆண்டு சென்னை வந்த சீன அதிபர் நடிகை பத்மினியின் நாட்டியத்தை கண்டுகளித்தார்
1956ஆம் ஆண்டு சென்னை வந்த அப்போதைய சீன அதிபர் சூ என் லாய் ஜெமினி ஸ்டூடியோவை சுற்றிப்பார்த்து மறைந்த நடிகை பத்மினியின் நாட்டியத்தை கண்டுகளித்தார்.
சென்னை,

சீன  அதிபர்  சூ என் லாய்  1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சென்னை வந்தார்.  மீனம்பாக்கம் விமான  நிலையத்தில் அவரை அப்போதைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா வரவேற்றார். இதன்பின்னர் அவர் இன்றைக்கு நேரு உள்விளையாட்டு அரங்கமாக உள்ள இடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.

அன்றே சென்னையில் பிரபல சினிமா நடிகை பத்மினியின் நாட்டியத்தை கண்டுகளித்தார், சீன அதிபர் சூ என் லாய்!

இது குறித்து 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ந்தேதி  “ தினத்தந்தி பத்திரிகை செய்தியில்” சென்னையை சுற்றிப் பார்க்க வந்திருக்கும் சீன அதிபர் சென்னை ஜெமினி ஸ்டூடியோவுக்கு போயிருந்தார். அவருடன் சீன துணை அதிபர் ஹோலுங், சீனாவில் இந்திய தூதரான ஆர். கே. நேரு, அவருடைய மனைவி, சென்னை மந்திரி பக்தவத்சலம் முதலியவர்கள் சென்று இருந்தார்கள் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ். எஸ். வாசன் சீன அதிபருக்கு ரோஜாப்பூ மாலை போட்டு வரவேற்றார். பிறகு சினிமா படம் பிடிக்கும் இடத்திற்கு சீன அதிபரை, வாசன் அழைத்துப்போனார்.

அங்கு நடன உடையில் மறைந்த பிரபல நடிகை பத்மினி காத்துக் கொண்டிருந்தார். சூ என் லாய்க்கு நடிகை பத்மினியை வாசன் அறிமுகப்படுத்தி வைத்தார். பத்மினியுடன் கை குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார் அப்போதைய சீன பிரதமர்.

பிறகு ஜெமினியில் தயாராகிற ஒரு இந்தி படத்திற்கான நாட்டியக்காட்சி சூ என் லாய் முன்னிலையில் படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில்  நடிகை பத்மினி நாட்டியம் ஆடினார்.

பிறகு சீன அதிபரை ஸ்டூடியோவில் உள்ள பல பகுதிகளுக்கு அழைத்து சென்று காண்பித்து வாசன் விளக்கினார். 

"நீங்கள் ஸ்டூடியோவை சுற்றிப் பார்த்தீர்களே உங்கள் அபிப்பிராயம் என்ன?" என்று சூ என் லாயிடம் பத்திரிகை நிருபர்கள் கேட்டார்கள். "மிகவும் நன்றாக இருக்கிறது" ஆனால் ரொம்ப கடினமான வேலை என்று அவர் பதிலளித்தார் என செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையிலுள்ள ஐசிஎஃப் வளாகத்தை பார்வையிட்டுள்ளார். ஐசிஎஃப் வளாகத்தின் வருகை பதிவேட்டில் சீன பிரதமர் சூ என்லாய்  இது ஒரு நவீன ரெயில்வே தயாரிப்பு நிறுவனம். சீனர்கள் இங்கு வந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிறுவனம் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு அளிக்கப்படும் பயிற்சியும் சிறப்பாக உள்ளது  என எழுதியிருந்தார்.

இதன்பிறகு சீன பிரதமர் சூ என் லாய்  மாமல்லபுரத்திலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டார். பின்னர் டிசம்பர் 7ஆம் தேதி அவர் சென்னையிலிருந்து புறப்பட்டார்.