மாநில செய்திகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் காரின் சிறப்பு அம்சங்கள்!! + "||" + Special features of the car used by Xi Jinping

சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் காரின் சிறப்பு அம்சங்கள்!!

சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் காரின் சிறப்பு அம்சங்கள்!!
சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் காரின் சிறப்பு அம்சங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் விலை உயர்ந்த, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கறுப்பு நிறத்தால் ஆன 4 கார்களும் போயிங் 747 விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளன.

தான் மட்டும் தனியாக பயணிக்க பிரேத்தியகமான காரைத் தயாரிக்குமாறு எப்ஏ.டபிள்யு(FAW) கார் தயாரிப்பு நிறுவனத்திடம் ஜி ஜின்பிங் தெரிவித்து இருந்தார்.

இதற்காக சீனாவின் பழமையான, மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு நிறுவனம் (Hongqi) ஹாங்கி எல்-5 ரக காரை சீன அதிபருக்காக உருவாக்கி உள்ளது.

'ஹாங்கி' என்பதற்கு சீன மொழியில் 'சிவப்புக் கொடி' என்று பொருள். 10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட என்ஜின் இதில் உள்ளது.

சீனாவில் மிக விலை உயர்ந்த காரான இந்த ஹாங்கி எல் 5 ரக காரின் விலை இந்திய மதிப்பில் 5 கோடியே 60 லட்ச ரூபாய்.. 

உருவத்திலும் பெரிய தோற்றம் கொண்ட இந்த காரானது, 3152 கிலோ எடை கொண்டது.

அதிபருக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கார் என்பதால் காரில் உள்ள பல விஷயங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

105 லிட்டர் பெட்ரோல் அல்லது கேஸ் நிரப்பிக்கொள்ளும் வசதி இந்த காரில் உள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 500 மைல்கள் வரை பயணிக்க முடியும். 

அதிக வேகத்தில் செயல்படும் ஏசி, செயற்கைக்கோள் தொலைபேசி வசதி இருக்கிறது. இதன் மூலம் காரில் செல்லும் போதும் எந்தவித தடையின்றி தெளிவாக பேச முடியும்.

காரின் கதவுகள் குண்டு துளைக்காத வகையிலும், சிறிய ரக ஏவுகணைகள் மூலம் தாக்கினாலும் எந்தவிதமான சேதமும் ஏற்படாத வகையிலும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.