தேசிய செய்திகள்

அவதூறு வழக்குகள் விசாரணை: ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜர் + "||" + Defamation Cases Investigation: Rahul Gandhi to appear in 2 courts today and tomorrow

அவதூறு வழக்குகள் விசாரணை: ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜர்

அவதூறு வழக்குகள் விசாரணை: ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜர்
அவதூறு வழக்குகள் விசாரணை தொடர்பாக, ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜராக உள்ளார்.
ஆமதாபாத்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ‘‘அனைத்து மோடிகளும் திருடர்கள்’’ என்று பேசினார்.

இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் அவர் மீது பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னே‌‌ஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக, ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) அந்த கோர்ட்டில் ஆஜராகிறார்.


இதுபோல், அமித்‌ஷாவை ‘‘கொலை குற்றம் சாட்டப்பட்டவர்’’ என்று பேசியதற்காக, ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலம் ஆமதாபாத் கோர்ட்டில் பா.ஜனதா கவுன்சிலர் தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக, நாளை ராகுல் கோர்ட்டில் ஆஜராகிறார். இத்தகவல்களை மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சதாவ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரின் கார் தீ வைத்து எரிப்பு? போலீசார் விசாரணை
புதுக்கோட்டையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரின் கார் நேற்று மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. கார் தீ வைத்து எரிக்கப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2. வெண்ணாற்றில் வாலிபர் பிணம் கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை
தஞ்சை வெண்ணாற்றில் வாலிபர் பிணம் கிடந்தது. அவரை யாரும் கொலை செய்து ஆற்றில் வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி போலீசார் விசாரணை
முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட கொள்ளையன் சுரேசிடம் 2-வது நாளாக விசாரணை
திருச்சியில் பிரபல நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்த சுரேசை போலீசார் காவலில் எடுத்து 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: கொள்ளையன் சுரேசுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அதிகாரிகள் விசாரணை
திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுரேசை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.