தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் இருந்து கோலாருக்கு கடத்தல்: 2 டன் செம்மரக்கட்டைகள் சிக்கியது - போலீசார் விசாரணை + "||" + Kolar smuggling from Tamil Nadu: Red sanders seized 2 tons - Police investigation

தமிழ்நாட்டில் இருந்து கோலாருக்கு கடத்தல்: 2 டன் செம்மரக்கட்டைகள் சிக்கியது - போலீசார் விசாரணை

தமிழ்நாட்டில் இருந்து கோலாருக்கு கடத்தல்: 2 டன் செம்மரக்கட்டைகள் சிக்கியது - போலீசார் விசாரணை
தமிழ்நாட்டில் இருந்து கோலாருக்கு கடத்தி வரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகள் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு,

கோலார் மாவட்டம் மாலூர் பகுதியில் நேற்று காலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை கவனித்த சரக்கு ஆட்டோவின் டிரைவர், ஆட்டோவை திருப்ப முயன்றார்.


இதனை கவனித்த போலீசார் அந்த சரக்கு ஆட்டோவின் அருகே விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் டிரைவர் சரக்கு ஆட்டோவைஅங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதன்பின்னர் அந்த சரக்கு ஆட்டோவில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் செம்மரக்கட்டைகள் இருந்தன. அந்த செம்மரக்கட்டைகளைதமிழ்நாட்டில் இருந்து கோலாருக்கு சரக்கு ஆட்டோவில் டிரைவர் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளையும், அதனை கடத்தி வந்த சரக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர்.

இதுகுறித்து மாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், சரக்கு ஆட்டோவில் தமிழ்நாட்டில் இருந்து கோலாருக்கு கடத்தி வந்த 57 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து உள்ளோம். இந்த செம்மரக்கட்டைகள் 2 டன் எடை கொண்டதாகும். இந்த செம்மரக்கட்டைகளை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைத்தவர் யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் தப்பி ஓடிய டிரைவரையும் தேடிவருகிறோம் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வக்கீல்களுக்கு நிவாரணத்தொகை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வக்கீல்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வக்கீல்களுக்கு வழங்கினார்.
2. தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு சோதனை
தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு சோதனை.
3. தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் சலூன் கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய கிராமப் பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
4. தமிழ்நாட்டில் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே வங்கிகள் செயல்படும்
தமிழ்நாட்டில், வங்கிகள் அனைத்தும் மே 3-ந்தேதிவரை பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.
5. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு - அதிகபட்சமாக ஈரோட்டில் 24 பேரை தாக்கியது
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 67 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேரை இந்த நோய் தாக்கியுள்ளது.