தேசிய செய்திகள்

பரப்பனஅக்ரஹாரா சிறையில் கத்திகள் சிக்கியதால் பரபரப்பு - சசிகலாவின் அறையிலும் சோதனை நடந்தது + "||" + ParappanaAkharahara prison caught with knives - Sasikala's room was also raided

பரப்பனஅக்ரஹாரா சிறையில் கத்திகள் சிக்கியதால் பரபரப்பு - சசிகலாவின் அறையிலும் சோதனை நடந்தது

பரப்பனஅக்ரஹாரா சிறையில் கத்திகள் சிக்கியதால் பரபரப்பு - சசிகலாவின் அறையிலும் சோதனை நடந்தது
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஏராளமான கத்திகள், கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு,

சசிகலா அடைக்கப்பட்டு உள்ள பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் ஏராளமான கத்திகள், கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாகவும், சிறைக்குள் இருந்தாவாறே சில ரவுடிகள் தங்கள் கூட்டாளிகள் மூலம் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் நேற்று காலையில் சிறையில் அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையில் உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

சிறையில் உள்ள கைதிகளின் அறைகள், முக்கிய ரவுடிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சில கைதிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் அறையிலும் இந்த சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சோதனையின் போது சிறைக்குள் கத்திகள், கத்திரிக்கோல், பிளேடு, கஞ்சா பொட்டலங்கள், பீடி, சிகரெட் பாக்கெட்டுகள், கஞ்சா பயன்படுத்த உபயோகிக்கப்படும் குழாய்கள், செல்போன்கள், சிம் கார்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இந்த பொருட்களால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கைதிகளுக்கு செல்போன், சிம் கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தது எப்படி? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பரப்பனஅக்ரஹாரா சிறையில் கத்தி உள்ளிட்ட பொருட்கள் சிக்கியிருப்பது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோதனை குறித்து போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

பெங்களூரு நகரில் குற்றங்களை தடுக்கவும், ரவுடிகளை ஒடுக்கவும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து கொண்டே சில ரவுடிகள், வெளியில் இருக்கும் தங்களது கூட்டாளிகள் மூலம் குற்றங்களில் ஈடுபடுவது பற்றியும் தகவல் கிடைத்தது.

எனவே பரப்பனஅக்ரஹாரா சிறையில் சோதனை நடைபெற்றது. சிறை முழுவதும் ஒவ்வொரு பகுதியையும் விடாமல் சோதனை மேற்கொண்டோம். இதில் சிறைக்குள் இருந்து 37 கத்திகள், கஞ்சா, செல்போன்கள், சிம் கார்டுகள் என ஏராளமான பொருட்கள் சிக்கியுள்ளன. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சந்தீப் பட்டீல் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது உண்மையே விசாரணை அறிக்கையில் தகவல்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
2. சேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட்டம்; போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
சேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்கள். சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
3. சசிகலா ஒப்புதலுடன் செய்தி தொடர்பாளராக நியமனம்: ‘அ.ம.மு.க.வில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது’ - தஞ்சையில், புகழேந்தி பேட்டி
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலா ஒப்புதலுடன் நான் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டவன். அ.ம.மு.க.வில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று தஞ்சையில், புகழேந்தி கூறினார்.
4. தண்டையார்பேட்டையில் வாலிபரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது
தண்டையார்பேட்டையில், வாலிபர் ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த ரவுடிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. தந்தை, மகன்கள் உள்பட 4 பேரை கத்தியால் குத்திய ஜோதிடர் உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை: தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பு
தாராபுரத்தில் தந்தை, மகன்கள் உள்பட 4 பேரை கத்தியால் குத்திய ஜோதிடர் உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஆசிரியரின் தேர்வுகள்...