கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா முதலில் பேட்டிங் + "||" + Test against South Africa, India batting first

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா முதலில் பேட்டிங்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா முதலில் பேட்டிங்
தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
புனே,

இந்தியாவுக்கு வந்துள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

புனே மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. 2017-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்க அணிக்கு முழுக்கு போடுகிறார், டேன் பீட்
தென்ஆப்பிரிக்க அணிக்கு முழுக்கு போட்டுவிட்டு அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்று மைனர் லீக் 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்க உள்ளார், டேன் பீட்.
2. தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆலோசகராக காலிஸ் நியமனம்
தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆலோசகராக காலிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.