மாநில செய்திகள்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது - முதலமைச்சர் கடிதம் + "||" + Across Cauvery Build the Megadadu Dam Karnataka should not be allowed Chief Minister Letter

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது - முதலமைச்சர் கடிதம்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது - முதலமைச்சர் கடிதம்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது என்று மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு நிலைகளில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, கர்நாடகாவின் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. காவிரியில் மேகதாது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதல் அளிக்க கூடாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திலும் வலியுறுத்த வேண்டும் என்றும், ஜல்சக்திதுறைக்கு போதுமான அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.