உலக செய்திகள்

துருக்கி சிரியாவின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை - மைக் பாம்பியோ + "||" + US did not approve Turkeys Syria offensive says Mike Pompeo

துருக்கி சிரியாவின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை - மைக் பாம்பியோ

துருக்கி சிரியாவின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை - மைக் பாம்பியோ
துருக்கி சிரியாவின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறினார்.
வாஷிங்டன்

வடகிழக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறியவுடன்  துருக்கி தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. சிரிய பாதுகாப்புப் படைகளின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்காவுடன்  இணைந்து போராடிய  குர்து  போராளிகளுக்கு எதிராக தனது நீண்டகால திட்டமிடப்பட்ட நடவடிக்கையைத் தொடர டிரம்ப், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கு அனுமதி கொடுத்தார்.

துருக்கிய விமானங்கள் குர்திஷ் நிலைகளை வான்வழி மற்றும் பீரங்கிகளால் தாக்கின.

குண்டுவெடிப்பினால்  300,000 மக்கள் இடம்பெயரக்கூடும் என்று மனிதாபிமான குழுக்கள் தெரிவித்து உள்ளன. எர்டோகனின் உயர்மட்ட ஆலோசகர்  கிறிஸ்டியன் அமன்பூர் துருக்கி தாக்குதலின் நோக்கம் குறித்து டிரம்ப் முன்கூட்டியே அறிந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிரியாவின் வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து அமெரிக்க படைகளை  திரும்பப் பெறுவதற்கான ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின்  முடிவு பரவலாக விமர்சிக்கப்பட்ட நிலையில் இந்த  முடிவை பாம்பியோ ஆதரித்து உள்ளார்.

துருக்கிக்கு நியாயமான பாதுகாப்பு அக்கறை மற்றும் அவர்களின் தெற்கு பகுதிக்கு  ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார்.

தாக்குதல் நடத்த துருக்கிக்கு  அமெரிக்கா அனுமதி அளித்ததாக வெளியான தகவல்கள் "தவறானவை" என்று அவர் கூறினார். அமெரிக்கா துருக்கிக்கு பச்சை விளக்கு காட்டவில்லை என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் - ஆளுநர்களுக்கு டிரம்ப் கோரிக்கை
வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் ஆளுநர்களுக்கு டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
2. மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் - சீனா கோபம்
அமெரிக்கா மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என சீனா கூறி உள்ளது.
3. கொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது - டிரம்ப் திட்டவட்ட அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது என்று ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார்.
4. முடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா
ஹாங்காங் மீது புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனாவால் ஹாங்காங் முடிவுக்கு வருகிறது.
5. லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் - டிரம்ப்அறிவிப்பு
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.