மாநில செய்திகள்

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி + "||" + in Chennai Bomb the country Trying to kill Rowdy's wife

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி
சென்னை ரிச்சி தெருவில் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி.
சென்னை

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் இன்று  பிற்பகல் 1 மணி அளவில் ஒரு இளம் பெண்ணும் அவரது உறவினரும் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது  அந்த பெண்ணை தொடர்ந்து வந்த ஒரு ஆட்டோவில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல்  இறங்கியது . அந்த கும்பல் திடீர் என அந்த பெண்ணின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. தொடர்ந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்தது. இதில் பயந்து போய் அவர் அலறி அடித்து ஓடினார். 

மக்கள் நெருக்கம்  மிக்க பகுதி என்பதால்  அந்த பெண் தப்பி விட்டார். மக்கள் கூடியதால் அந்த கும்பல் அங்கிருந்து தலைமறைவாகி விட்டது. காயம் அடைந்த அந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

அந்த இளம் பெண்  ரவுடி சேகர்  என்பவரின் 3 வது மனைவி என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.  ஆனால் உறுதியான தகவல்கள் இல்லை.

சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பட்டப்பகலில்  இந்த கொலை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கணவனின் முதல் மனைவியின் ஆறு வயது குழந்தையை மாடியில் இருந்து வீசி கொலை செய்த சித்தி
கணவனின் முதல் மனைவியின் குழந்தை என்பதால் சொந்த சித்தியே ஆறு வயது சிறுமியை மாடியில் இருந்து வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. அரசு போக்குவரத்துத் துறைக்கு ஜெர்மன் வளர்ச்சி வங்கி ரூ.1,600 கோடி கடனுதவி
அரசு போக்குவரத்துத் துறைக்கு ஜெர்மன் வளர்ச்சி வங்கி ரூ.1,600 கோடி கடனுதவி வழங்கி உள்ளது.
3. ரூ.11 லட்சம், 75 சவரன் வரதட்சணை : போதையில் உளறிய மாமா; சிக்கிக்கொண்ட போலி டாக்டர் மாப்பிள்ளை
வில்லிவாக்கத்தில் ஒரு குடும்பத்தையே ஏமாற்றி ரூ.11 லட்சம், 75 சவரன் வரதட்சணை வாங்கி திருமணம் செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
4. சென்னையில் பயங்கரம் : பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக்கொலை
சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் ஹவில்தார் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
5. வாட்ஸ்அப் வீடியோவில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த சென்னை என்ஜினீயர் கைது
வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த சென்னை என்ஜினீயரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...