மாநில செய்திகள்

சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற விவகாரம்: சசிகலா வீடியோ தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது + "||" + Sasikala video sent to forensic study

சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற விவகாரம்: சசிகலா வீடியோ தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது

சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற விவகாரம்: சசிகலா வீடியோ தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது
சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற விவகாரம் தொடர்பாக சசிகலா வீடியோ தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
சென்னை, 

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ஷாப்பிங் சென்று வந்ததாக கடந்த ஆண்டு வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிறையில் அவருக்கு சலுகைகள்  செய்து கொடுக்க அப்போதைய சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்யநாராயணா ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக போலீஸ் அதிகாரி ரூபா குற்றம் சாட்டி இருந்தார். 

வீடியோ ஆதாரங்களையும், சிறையில் சசிகலா அறையில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட மசாலா பொருட்கள் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்ட தனி அறை குறித்த விவரங்களையும் ஆதாரமாக சேகரித்து கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசாரிடம் ரூபா புகார் கொடுத்தார்.

இந்த விவகாரம் குறித்து சத்ய நாராயணா, ரூபா, கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி ஆகியோரிடம் கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். விரைவில் சசிகலா மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

சசிகலா ஷாப்பிங் சென்று வந்த வீடியோ உண்மையானது தானா? என்பது  குறித்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். அது உண்மையான வீடியோவா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா? என்பதை அறியும் தடயவியல் ஆய்வகம் கேரளாவில் மட்டுமே உள்ளது. இதனால் கேரள தடயவியல் துறைக்கு அந்த வீடியோவை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் அனுப்பி உள்ளனர்.