மாநில செய்திகள்

சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - கமல்ஹாசன் + "||" + Congratulations to PM Modi - Kamal Haasan

சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்

சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்
சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என்று மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை உலக பேட்மின்டன் சாம்பியன் பி.வி.சிந்து திடீரென சந்தித்தார். பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

கமல்ஹாசனுடன் சந்திப்பு குறித்து பி.வி.சிந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  கமல் ஒரு நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவர் என்பதால் அவரை சந்தித்தேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சீன அதிபர் தமிழகம் வருவது வரவேற்கத்தக்கது. 60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் தமிழகம் வருவது மகிழ்ச்சி. சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை.  பேனரை எதிர்க்கவில்லை. சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம். அனைத்து நல்ல காரியங்களும் அரசால் மட்டுமே நடைபெறுவது இல்லை. சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.