மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் குவிந்த சீன பத்திரிகையாளர்கள்! + "||" + Chinese journalists concentrated in Mamallapuram!

மாமல்லபுரத்தில் குவிந்த சீன பத்திரிகையாளர்கள்!

மாமல்லபுரத்தில் குவிந்த சீன பத்திரிகையாளர்கள்!
பிரதமர் நரேந்திரமோடி-சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர்.
மாமல்லபுரம்,

பிரதமர் நரேந்திரமோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிப்பதற்காக சீன நாட்டை சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.

இதுதவிர சீன நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியை சேர்ந்தவர்களும் அதிநவீன கேமராக்களுடன் வந்துள்ளனர். இவர்கள் மாமல்லபுரத்தில் சீன அதிபர் பார்வையிட உள்ள இடங்களை படம் பிடித்தனர்.

இதுதவிர டெல்லியில் இருந்தும் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர்.