மாநில செய்திகள்

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி + "||" + PM Modi arrives at Chennai airport

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க 2 நாள் பயணமாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி.
சென்னை

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று முற்பகல் 11.10 மணிக்கு, சென்னை வந்தார். டெல்லியிலிருந்து, சென்னை விமான நிலையம் வந்தடைந்த  பிரதமர் நரேந்திர மோடியை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் நடைபெறும் வரவேற்பிற்கு பின்னர், அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம், பிரதமர் நரேந்திர மோடி கோவளம் புறப்பட்டுச் செல்கிறார். கோவளத்திலிருந்து, மாலை மாமல்லபுரம் பயணமாகும் பிரதமர் நரேந்திர மோடி, 5 மணியளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. "உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் "உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" அடுத்த 5 ஆண்டுகளில் 15 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
2. கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு
கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தி உள்ளன.
3. 70 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரே ஆண்டில் நிகழ்த்தியவர், பிரதமர் மோடி துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
70 ஆண்டுகள் செய்ய முடியாத சாதனையை பிரதமர் மோடி ஒரே ஆண்டில் நிகழ்த்தியுள்ளார் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
4. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை - பிரதமர் மோடி
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. பிரதமர் மோடி பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு
பிரதமர் மோடி பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.