சினிமா செய்திகள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168-வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + In the leopard Siva movement 168th picture of Rajini Official announcement

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168-வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168-வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்... இயக்குநர் இவரா?... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 4-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், படம் நன்றாக வந்திருப்பதாக கூறினார்.

இதனிடையே தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த ரஜினிகாந்த், இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும், கிராமப்புறத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. எந்திரன், பேட்ட படங்களுக்கு பிறகு ரஜினி படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ரஜினியின் 168-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அதிக சம்பளம் பெற்ற 100 நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய பிரபலம்
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2020ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற 100 நட்சத்திரங்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து இந்தி நடிகர் அக்சய் குமாரின் பெயர் மட்டுமே உள்ளது.
2. ரெயில் நிலையத்தில் இறந்த புலம்பெயர்ந்த பெண்ணின் குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உதவி
ரெயில் நிலைய நடைமேடையில் புலம் பெயர்ந்த பெண் ஒருவர் இறந்து கிடக்க அது தெரியாமல் எழுப்ப முயன்ற குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உதவி செய்துள்ளார்.
3. வடிவேலு குறித்து சிங்கமுத்து பேசியது என்ன? மன்னிப்பு கேட்ட மனோபாலா
நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் நடிகர் வடிவேலு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
4. இளைஞர்கள் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை பரிந்துரைத்த விவேக்
இளைஞர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை நடிகர் விவேக் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
5. நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார்
நடிகர்கள் சிங்க முத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் வடிவேலு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.