கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்தார் விராட் கோலி + "||" + 2nd Test against South Africa: Virat Kohli scored a century

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்தார் விராட் கோலி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்தார் விராட் கோலி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
புனே,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி  பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 85.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்தது.  கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரஹானே 145 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் விராட் கோலி 173 பந்துகளில் தனது 26 வது டெஸ்ட் சதத்தை அடித்தார். கேப்டனாக இது இவருடைய 19 வது டெஸ்ட் சதமாகும். இந்த ஆண்டில் கோலி அடித்த முதல் டெஸ்ட் சதம் இதுவாகும்.

உணவு இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 104 ரன்கள்(183 பந்துகள்), ரஹானே 58 ரன்களுடன்(161 பந்துகள்) களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நான் விராட் கோலி’ - வார்னர் மகளின் ருசிகர வீடியோ
நான் விராட் கோலி என வார்னர் மகள் கூறும் ருசிகர வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
2. 31-வது பிறந்த நாள் : தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்ட விராட்கோலி
31-வது பிறந்த நாள் கொண்டாடி வரும் விராட் கோலி தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்டு உள்ளார்.
3. வங்காளதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு
வங்காளதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4. நேர்மையான நோக்குடன் பணியாற்றினால் அதற்கேற்ற முடிவுகள் கிடைக்கும்; விராட் கோலி
நேர்மையான நோக்குடன் நாம் பணியாற்றும் வரை அதற்கேற்ற முடிவுகள் நமக்கு கிடைத்து கொண்டே இருக்கும் என விராட் கோலி கூறியுள்ளார்.
5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; ரஹானே சதம் விளாசல்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரஹானே சதம் விளாசினார்.