மாநில செய்திகள்

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு : 3 பெண்கள் உள்பட 11 திபெத்தியர்கள் கைது + "||" + Opposition to visit Chinese president 11 Tibetans arrested including 3 women

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு : 3 பெண்கள் உள்பட 11 திபெத்தியர்கள் கைது

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு :  3 பெண்கள் உள்பட 11 திபெத்தியர்கள் கைது
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடத்த முயன்ற 3 பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்
சென்னை

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வர இருப்பதையொட்டி, சென்னை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச இருக்கும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வர சில மணி நேரமே உள்ள நிலையில்  சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டல் அருகே முழக்கமிட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 5  திபெத்தியர்களை போலீசார்  கைது செய்து அழைத்துச் சென்றனர். 

பலத்த பாதுகாப்பையும் மீறி சீன அதிபர் தங்க உள்ள ஓட்டல் அருகே வந்து போராட்டம் நடத்திய போது போலீசாரிடம் சிக்கினர். சீன அதிபருக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். 

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா  ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

சென்னை விமான நிலையத்திற்கு வெளியேயும் ஒரு திபெத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்ப்பு தெரிவிக்கும் முயற்சிகளை முறியடிக்க கடந்த சில நாட்களாக 20 திபெத்தியர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மாமல்லபுரம் அருகே வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 4  சீன இளைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தொட்டியம் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்
தொட்டியம் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
2. அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவர், கண்டக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து பணிமனையில் வார விடுமுறை வழங்கக்கோரி டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பண்ருட்டி மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்காததை கண்டித்து போராட்டம்; அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
பண்ருட்டி மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்காததை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. மாணவர் சங்க நிர்வாகியை தாக்கிய போலீஸ் அதிகாரியை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மாணவர் சங்க நிர்வாகியை தாக்கிய போலீஸ் அதிகாரியை கண்டித்து திருவாரூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. சகதியான சாலையில் நாற்று நடும் போராட்டம் வியாபாரிகள், பொதுமக்கள் நடத்தினர்
சகதியாக மாறிய சாலையில் நாற்று நடும் போராட்டத்தை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் நடத்தினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...