மாநில செய்திகள்

கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங் + "||" + Tamil Nadu: Chinese President Xi Jinping leaves for Mahabalipuram from Chennai. Xi

கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங், கிண்டி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு புறப்பட்டார்.
சென்னை,

2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுகிறது.  இதற்காக  இன்று பிற்பகல் சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் ஜி ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு  சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றார்.  சிறிது நேரம் ஓய்வெடுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்,  சுமார்  4 மணியளவில் காரில் சர்தார் பட்டேல் ரோடு, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரம் சென்று கொண்டிருக்கிறார்.   

சீன அதிபர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  சாலையின் இருபுறமும் கலை நிகழ்ச்சிகள் மூலம் சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.  வழி நெடுகிலும் இரு நாட்டு கொடிகளை அசைத்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனா, இத்தாலி வைரசைவிட இந்திய வைரஸ் கொடியது- நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு
சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் கொடியது என்று நேபாள பிரதமர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2. கொரோனா பரவலைக் குறைப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்தை விட சிறப்பாக செயல்படும் இந்தியா
இந்தியாவை விட குறைவான நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்புகள் ஒரு லட்சம் வரை உயர்ந்தன.
3. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் 20 லட்சத்தை தாண்டியது; தமிழகம் 3 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் 20 லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகம் 3 லட்சத்தை நெருங்கி உள்ளது
4. இந்தியாவில் கடந்த 24 மணி கொரோனாவால் 134 பேர் உயிரிழப்பு;மாநிலம் வாரியாக பாதிப்பு விவரம்
இந்தியாவில் கடந்த 24 மணி கொரோனா தொற்றால் 134 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2549 ஆக உயர்ந்துள்ளது.
5. உலகம் முழுவதும் 12 லட்சம் குழந்தைகள் அடுத்த 6 மாதங்களில் உயிரிழக்கும் அபாயம்?
கொரோனாவின் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் 12 லட்சம் குழந்தைகள் அடுத்த 6 மாதங்களில் உயிரிழக்கக் கூடும் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் வெளியிட்டுள்ளது.