மாநில செய்திகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி + "||" + Tamil Nadu: Prime Minister Narendra Modi receives Chinese President Xi Jinping at Mahabalipuram.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி
மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார்.
மாமல்லபுரம், 

2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுகிறது.  இதற்காக  இன்று பிற்பகல் சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு  சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றார்.  சிறிது நேரம் ஓய்வெடுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்,  சுமார்  4 மணியளவில் காரில் சர்தார் பட்டேல் ரோடு, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரத்திற்கு வந்து சேர்ந்தார். 

சீன அதிபருக்கு முன்பாகவே மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்ததும், கைகுலுக்கி வரவேற்றார். சீன அதிபரை வரவேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி - சட்டையுடன் பிரதமர் மோடி வருகை தந்திருந்தார்.  மாமல்லபுரத்தில் உள்ள கலை சிற்பங்களை இருதலைவர்களும் ரசித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கனடா பிரதமராக மீண்டும் தேர்வு: ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கனடா பிரதமராக மீண்டும் தேர்வு பெற்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. தேர்தலில் போட்டியாளர்கள் இல்லை என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா பொதுக்‌கூட்டங்கள் நடத்தப்பட்டது ஏன்? பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி
தேர்தலில் போட்டியாளர்களே இல்லை என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா கலந்துகொண்ட இத்தனை பொதுக்கூட்டங்கள் எதற்காக என பா.ஜனதாவுக்கு கூட்டணி கட்சியான சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
3. பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை படம் பிடித்த 2 பேரிடம் விசாரணை
பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை படம் பிடித்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
4. யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கிறது -பிரதமர் மோடி கிண்டல்
தற்செயலாக யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
5. ‘மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை’ பிரதமர் மோடி எச்சரிக்கை
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.