உலக செய்திகள்

தனது நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்றி உள்ள சீனா + "||" + China executed biggest projects in the world in his country

தனது நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்றி உள்ள சீனா

தனது நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்றி  உள்ள சீனா
சீனா தன்னுடைய நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.
பீஜிங்

தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, சென்னை விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தவில், நாதஸ்வரம் இசைத்தும், கொம்பு ஊதியும், சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டு பாரம்பரிய கலைநிகழ்வுகளுடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங், கையை அசைத்து, கலைஞர்களை உற்சாகப்படுத்தி, கலைஞர்களின் வரவேற்பினை ஏற்றார்.

விமான நிலையம் முதல், அவர்  தங்கும் கிண்டி ஓட்டல் வரையிலும், மிகுந்த உற்சாகத்துடன், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீனா பழமையான வரலாறு  மற்றும் நாகரீகத்தை கொண்டிருந்தாலும் உலகையே திரும்பி பார்க்கும் வகையில் அமெரிக்காவுக்கு அடுத்து  சீனா  உள்ளது. சீனா தன்னுடைய நாட்டில்  உலகிலேயே மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்றி  உள்ளது. 

சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ள ஒரு தீபகற்ப நாடாகும். அதன் மொத்த நிலப்பரப்பு 9597900 சதுர கி.மீட்டர் ஆகும். சீனா வடக்கே மங்கோலியாவையும் வட கிழக்கில் ரஷ்யாவையும் வட கொரியாவையும் கிழக்கில் மஞ்சள், கிழக்கு சீன கடல்களையும் தெற்கே வியட்னாவையும் தென் மேற்கே பாகிஸ்தானையும் எல்லையாக கொண்டு உள்ளது. 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வரலாறு கொண்ட சீனா சிறப்பான பண்பாடு மற்றும் நாகரீகம் கொண்ட நாடாகும்.

சீனரின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாக விளங்குவது அவர்களின் கட்டிடக்கலை ஆகும். சீனரின் கட்டிடக்கலை என்னும் போது சீனப்பெருஞ்சுவராகும். கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள் பற்றி அறிந்திருந்தனர்.  இச் சுவர் குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை.  கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச் சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு, வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. 
சீனாவில் நட்சத்திர மீனை போன்ற தோற்றத்தில் உள்ள  விமான நிலையம் தான் உலகிலேயே மிக பெரிய விமான நிலைய கட்டிடம் ஆகும். சீனாவின் தலைநகரான பீஜிங்கியில் இருந்து 46 கிலோ மீட்டர் தூரத்தில் டாக்சிங் நகரில் உள்ள இந்த விமான நிலைய கட்டிடம் மட்டும் 11 கோடி சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.

11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 5 ஆண்டுகளாக விமான நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றன. கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் இயங்கத் தொடங்கி உள்ள இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 72 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. இந்த விமான நிலையம் சீனாவில் கட்டுமான பணிக்கு ஒரு சான்று.சீனாவின் ஹூபே மாகாணத்தில் சான் டோப்பிங் நகருக்கு அருகே யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மூன்று ஆழ் பள்ளத்தாக்கு அணை என்ற திரி ஜார்ஜ்ஸ் அணை தான் உலகிலேயே மிகப்பெரிய நீர் மின்நிலையத்தை கொண்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அந்த மின் நிலையம் 22,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.  594 அடி உயரமும், 7661 அடி நீளமும் கொண்ட அந்த அணையின் கீழ் மட்ட அகலம் 3377 அடி, மேல் மட்ட அகலம் 131 அடி. அந்த அணையில் இருந்து அதிக பட்சமாக வினாடிக்கு4 கோடியே 10 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட முடியும்.

3 லட்சத்து 90 ஆயிரம் சதுர மைல் பரப்பை நீர்பிடிப்பு பகுதியாக கொண்ட அந்த அணை சீனாவில் மற்றொரு பிரமாண்ட திட்டமாகும்.தியான்ஜின் பின்காய் நூலகம்  சீனாவின் பின்காய் மாவட்டத்தில் தியான்ஜின் நகரில் 2017 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நூலகமே அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய நூலகமாகும்.

33,700 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தில் 1.2 மில்லியன் புத்தகங்கள் உள்ளன.  நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் வந்து செல்லும் இந்த நூலகமும் சீனாவின் நவீன கட்டுமானத்திற்கும் பிரமாண்ட திட்டங்களுக்கும் சான்றாக உள்ளது.
ஹாங்காங்கையும், சீனாவின் மாசூ நகரையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாலமே உலகின் மிகப்பெரிய கடற் பாலமாகும். 9 ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது. பேர்ல் ஆற்றின் குறுக்கிலும், கடல் நீரிலுமாக 55 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதில் 7 கிலோ மீட்டர் தூரம் கடலுக்கு அடியிலும் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 4 லட்சம் டன் இரும்பை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த பாலம் எந்த நிலநடுக்கத்தையும் தாங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - மாமல்லபுரம் இடையிலான தூரமாக 55 கிலோ மீட்டர் வரை பாலம் கட்டினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு பிரமாண்ட தோற்றத்தில் இந்த பாலம் காட்சி அளிக்கிறது.சீனாவின் கட்டுமான திறனுக்கு மற்றொரு சான்று ஷாங்காய் - நான்ஜிங் இடையிலான பாலம். 164.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலம் தான், ஆறு, ஏரி, நிலம் என பல பகுதிகளை கடந்து செல்லும் வகையில் கட்டப்பட்ட பிரமாண்ட பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

யாங்ட்சி ஆற்றை ஒட்டி 80 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் பாலம், யாங்செங் ஏரியையும் கடந்து செல்கிறது. 10,000 தொழிலாளர்களை கொண்டு 4 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த பாலம் 2011 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டது இந்த பாலம். சீனாவின் செங்டூ நகரில் 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சர்வதேச மையம் தான் உலகிலேயே மிக பெரிய கட்டிடமாகும். 500 மீட்டர் நீளமும், 400 மீட்டர் அகலமும், 100 மீட்டர் உயரமும் கொண்ட அந்த கட்டிடத்தின் உள் பகுதி 1.7 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனை விட மூன்று மடங்கும், ஆஸ்திரேலியாவின் ஓபரா ஹவுசை விட 20 மடங்கும் பெரியது இந்த சர்வதேச மையம். ஓட்டல்கள், திரையரங்குகள், கடைகள், அலுவலகங்கள் என ஒரு குட்டி நகரத்தை தனக்குள் கொண்டுள்ளது இந்த மையம்.