மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் + "||" + PM Modi, Xi visit sea-facing Shore Temple during informal summit

மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த பிரதமர் மோடி - ஜி ஜின்பிங்

மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த பிரதமர் மோடி - ஜி ஜின்பிங்
கடற்கரை கோவில் அருகே கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கலை நிகழ்ச்சிகளை இருதலைவர்களும் பார்த்து ரசித்தனர்.
மாமல்லபுரம், 

2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுகிறது.  இதற்காக  இன்று பிற்பகல் சென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் ஜி ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சாலை மார்க்கமாக  மாமல்லபுரத்திற்கு வந்த சீன அதிபரை  பிரதமர் மோடி, கைகுலுக்கி வரவேற்றார். சீன அதிபரை வரவேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி - சட்டையுடன் பிரதமர் மோடி வருகை தந்திருந்தார்.  மாமல்லபுரத்தில் உள்ள கலை சிற்பங்களை இருதலைவர்களும் ரசித்தனர். 

பின்னர் இரு தலைவர்களும் நடந்தபடி பேசியவாறே அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்தனர்.  பின்னர் கார் மூலம் ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று பார்த்து ரசித்தனர்.

கடற்கரை கோவில் அருகே  கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு  இருந்தது. இதற்காக அங்கு குண்டு துளைக்காத வகையில் 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு அரங்கத்தில் பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் அமர்ந்து பேசியவாறே அருகில் உள்ள மற்றொரு அரங்கத்தில் நடைபெறும் கலாசேத்ரா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியையும், நாடகத்தையும் கண்டு களித்தனர்.

கலை நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நாட்டியம் நிகழ்த்திய கலைக்குழுவினருடன் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  சீன அதிபர்  ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார். 


தொடர்புடைய செய்திகள்

1. மே.வங்க மாநிலத்திற்கு முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி : பிரதமர் மோடி
மேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
2. அம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிட்டார் பிரதமர் மோடி
அம்பன் புயல் சேதங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட்டார்.
3. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி இன்று பார்வையிடுகிறார்
மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.
4. 5-வது கட்டமாக புதிய அறிவிப்புகள்: மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் - பிரதமர் மோடி
மத்திய நிதி மந்திரியின் 5வது கட்டமாக புதிய அறிவிப்புகள் மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்கள் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சியடையும் - பிரதமர் மோடி
நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்கள் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சியடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.