மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங் + "||" + Chinese President Xi Jinping departs Chennai from Mamallapuram

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சீன அதிபர் புறப்பட்டார்.
மாமல்லபுரம், 

இந்தியாவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் வந்த ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார்.  பின்னர் இரு தலைவர்களும் நடந்தபடி பேசியவாறே அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்தனர். 

 பின்னர் கார் மூலம் ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று பார்த்து ரசித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை இரு தலைவர்களும் கண்டு ரசித்தனர். பின்னர் சீன அதிபருக்கு இரவு உணவு விருந்தை பிரதமர் மோடி அளித்தார். 

அதன்பிறகு திட்டமிட்ட நேரத்தை விட   கூடுதலாக  1 மணி நேரத்திற்கும் மேலாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.  இதனைத்தொடர்ந்து, ஜி ஜின்பிங், காரில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட  ஜி ஜின்பிங்கை  கார் வரை வந்து பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. ரகசிய குறியீட்டை சுமந்து கொண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்த ‘உளவு புறா’
ரகசிய குறியீட்டை சுமந்து கொண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ‘உளவு புறா’ ஒன்று பறந்து வந்துள்ளது.
2. டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக விமானத்தில் வந்த 5-வயது சிறுவன்!
டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக விமானத்தில் 5-வயது சிறுவன் வருகை தந்தது விமானப்பயணிகளை நெகிழச்செய்தது.
3. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு
அம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
4. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது
இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
5. மே.வங்க மாநிலத்திற்கு முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி : பிரதமர் மோடி
மேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.