மாநில செய்திகள்

தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது - வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே + "||" + Tamil Nadu has received a good welcome - Secretary of State Vijay Gokhale

தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது - வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே

தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது - வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
சென்னை,

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் நாள் சந்திப்பு நிறைவடைந்தநிலையில், இரவு உணவுக்கு பின், இருவரும் ஓட்டலுக்கு திரும்பி உள்ளனர். நாளை மீண்டும் இருவரும் சந்திக்க உள்ளனர்.


இந்நிலையில்,  இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே கூறுகையில், “சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை தமிழக அரசின் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக சீன அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டினார். பிரதமர் மோடி-  சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பில் வர்த்தகம் , பொருளாதாரம், முதலீகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இருநாடுகளிடையே நிலவும் பிரச்னைகள் தொடர்பாகவும், அதனை சரி செய்வது தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது. மேலும் இந்தியா-சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள் மற்றும் சீனா-மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டது” என்று அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவு பெற்றது.
2. தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே ஆரோக்கியமான பாலமாக இருப்பேன் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
4. தமிழகம்-கேரளா நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட குழு: எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் பேச்சுவார்த்தையில் முடிவு
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் நேற்று திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
5. தமிழகத்தில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ ஆஸ்பத்திரிகள் - மத்திய மந்திரியிடம் அமைச்சர் வலியுறுத்தல்
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் அமைக்க மத்திய மந்திரியிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.