தேசிய செய்திகள்

பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்: பாக்.கிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு + "||" + army raises concerns with pak army over targeting of civilians in ceasefire violations

பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்: பாக்.கிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு

பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்: பாக்.கிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு
எல்லையில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. சில சமயங்களில் பாகிஸ்தான், எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.  இதற்காக இந்தியா தனது எதிர்ப்பை பாகிஸ்தானிடம் பதிவு செய்துள்ளது. 

கடந்த 1 ஆம் தேதி இருநாடுகளின் ராணுவச் செயல்பாடுகளுக்கான இயக்குநா்கள் அளவிலான பேச்சுவாா்த்தை நடைபெற்றபோது இந்த விவகாரத்தை பாகிஸ்தானிடம் இந்தியா எழுப்பியது. கடந்த மாதம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி நடத்திய தாக்குதலின்போது, பள்ளிக் குழந்தைகளை பத்திரமாக அந்த இடத்திலிருந்து இந்திய ராணுவம் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் பறந்த பாகிஸ்தான் ஆள் இல்லா விமானம்
இந்தியாவின் பஞ்சாப் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் ஆள் இல்லா விமானம் மீண்டும் பறந்து உள்ளது.
2. இந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டனுக்கு இம்ரான்கான் விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல் குறித்து இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கமளித்தார்.
3. பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்
பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
4. 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது
5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது சேதம் குறித்த விவரம் இல்லை.
5. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் மரணம்
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...