தேசிய செய்திகள்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் + "||" + Mukesh Ambani Remains Richest Indian, Gautam Adani Jumps 8 Spots To No. 2

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

அமெரிக்காவில் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை,   இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை (2019) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்,  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.  12-வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து   மதிப்பு  51.4 பில்லியன்  டாலராக  உள்ளது. 

தொழிலதிபர் கவுதம் அதானி 8 இடங்கள் முன்னேறி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 15.7 பில்லியன் டாலராக உள்ளது.  இந்துஜா சகோதரர்கள் (15.6 பில்லியன்), பலோன்ஜி மிஸ்திரி (15 பில்லியன் டாலர்), உதய் கோட்டக் (14.8  பில்லியன் )  ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிகையின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் (2019)  சமீபத்தில் வெளியானது. அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில்  இருந்தார். அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ் முதல் இடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாவது  இடத்திலும் இருந்தனர்.