தேசிய செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார்: சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு + "||" + "Jagan Reddy Is Acting Like A Psycho": N Chandrababu Naidu

ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார்: சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு

ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார்:  சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு
ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார் என்று சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.
விசாகப்பட்டினம்,

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

விசாகப்பட்டினம் சென்ற சந்திரபாபு நாயுடு அங்கு பேசியதாவது:- “  ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மக்கள் விரோத கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. பிற கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக தேவையற்ற சட்டவிரோதமான வழக்குகள் பதியப்படுகின்றன. தேவையற்ற பிரச்சினைகளை போலீசார் உருவாக்குகின்றனர். என்னிடம் நல்ல முறையில் இருப்பவர்களிடம் மட்டுமே நான் நல்லவனாக இருப்பேன். 

ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. கட்சித்தலைவர்கள் ஜெ வரியை(ஜெகன் வரி) வசூலிக்கின்றனர்.  

பல முதல் மந்திரிகளை நான் பார்த்துள்ளேன். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி போல ஒரு மோசமான முதல்வரை நான் பார்த்தது இல்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். அரசு தனது ஆணவப்போக்குடன் செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  எங்கள் கட்சித்தலைவர்களை குறிவைத்து அரசு செயல்படுகிறது. இது நியாயமற்றது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
2. சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பின்னோக்கி நடக்கும் போராட்டம்
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் பின்னோக்கி நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. “உங்கள் குழந்தைகள் எங்கு படித்தார்கள்?” - சந்திரபாபு நாயுடுவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி
ஆந்திர பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. கட்சியின் கொடி நிறத்தில் அரசு அலுவலகங்களுக்கு வர்ணம் பூசுவதா? ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாஜக கண்டனம்
ஆந்திராவில் கட்சியின் கொடி நிறத்தில் அரசு அலுவலகங்களுக்கு வர்ணம் பூசுவதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.