தேசிய செய்திகள்

அரசின் வெளிப்படைத்தன்மை ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவையை குறைக்கும்- அமித் ஷா + "||" + Govts transparency reducing need for filing RTI Amit Shah

அரசின் வெளிப்படைத்தன்மை ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவையை குறைக்கும்- அமித் ஷா

அரசின் வெளிப்படைத்தன்மை ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவையை குறைக்கும்- அமித் ஷா
அரசின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதின் மூலம் ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவை குறைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என அமித்ஷா கூறி உள்ளார்.
புதுடெல்லி

மத்திய தகவல் ஆணையத்தின் (சிஐசி) 14 வது ஆண்டு மாநாட்டில்  மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, அவநம்பிக்கையை நிவர்த்தி செய்துள்ளது. அரசின் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதின் மூலம் ஆர்டிஐ தாக்கல் செய்வதற்கான தேவை குறைகிறது. அதிகபட்ச தகவல்களை பொது களத்தில் வைப்பதன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்ட பயன்பாட்டைக் குறைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது .இந்த சட்டம் உருவாக்கும் போது, அதன் தவறான பயன்பாடு குறித்த அச்சங்கள் இருந்தன, ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் இதன் நன்மைகள் தவறான பயன்பாட்டை விஞ்சி விட்டன.

மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கான தகவல்கள் ஏழை பயனாளிகளுக்கு கூட ஆன்லைனில் செல்வதன் மூலம் அவற்றைப் பற்றியும் அவை செயல்படுத்தப்படுவதையும் பற்றிய தகவல்களைப் பெற உதவியுள்ளன என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக நேரு தான் காரணம் - மத்திய மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டு
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக காரணம் என மத்திய மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
2. பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ; சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்
பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
3. டெல்லியில் காஷ்மீர் நிலவரம் குறித்து அமித்ஷா ஆலோசனை
காஷ்மீர் நிலவரம் குறித்து டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
4. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்
பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
5. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட அமித்ஷா
பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...