மாநில செய்திகள்

2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் பயணம் + "||" + Chinese President Xi Jinping completes 2-day Chennai tour

2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் பயணம்

2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் பயணம்
2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் புறப்பட்டு சென்றார்.
சென்னை

சென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய கைலாஷ், ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று கிழக்குக் கடற்கரை சாலை வழியே கோவளம் பயணம் செய்தார். கோவளத்தில் சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி.

பேட்டரி கார் மூலம், ஓட்டல் வளாகத்தை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து, கடற்கரை கண்ணாடி அருகே, இருவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையை தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

தொடர்ந்து   சீன அதிபரிடம், காஞ்சி பட்டு நெய்வது (தறி), குத்து விளக்கு, கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விளக்கினார் பிரதமர் மோடி. சீன அதிபருக்கு பட்டாடையை பரிசளித்தார் பிரதமர் மோடி. 

சீன அதிபருக்கு பிரதமர் மோடி அளித்த மதிய விருந்து நிறைவு பெற்றது கோவளம் தனியார் விடுதியில் இருந்து சென்னை புறப்பட்டார். ஓட்டலின் வாயலில் வந்து சீன அதிபரை வழியனுப்பி வைத்தார் பிரதமர் மோடி!

கோவளம் தனியார் விடுதியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

சீன அதிபர் செல்வதையொட்டி கிண்டி, அடையாறு, ராஜீவ்காந்தி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.

சீன அதிபர் ஜின்பிங்கை, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால்  சென்னை விமான நிலையத்தில்  வழியனுப்பி வைத்தனர் 

சீன அதிபரை வழியனுப்பும் விதத்தில் சென்னை விமான நிலையத்தில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.