மாநில செய்திகள்

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவில்லை -விஜய் கோகலே + "||" + Foreign Secretary Vijay Gokhale issue was not raised and not discussed

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவில்லை -விஜய் கோகலே

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவில்லை -விஜய் கோகலே
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவில்லை என்று வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே கூறினார்.
சென்னை

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரு தலைவர்களும் இன்று கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் உரையாடினர். அதைத் தொடர்ந்து தூதுக்குழு மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. பின்னர்  பிரதமர் மோடி சின்ன அதிபருக்கு மதிய விருந்து அளித்தார். இந்த உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களுக்கிடையில் மொத்தம் 6 மணி நேரம்  சந்திப்பு நடைபெற்றது.

வர்த்தகம், முதலீடு மற்றும் சேவைகள் குறித்து விவாதிக்க ஒரு உயர்மட்ட குழு நிறுவப்படும். இதில் சீன வைஸ் பிரீமியர் ஹு சுன்ஹுவா,  இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் இடம்பெறுவர்.

சீனாவில் உள்ள தமிழ் ஆலயங்கள் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விவகாரங்கள் குறித்து தகவல் தொடர்பை அதிகரிக்கவும் இருநாட்டுத் தலைவர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். 

காஷ்மீர் விவகாரம்  எழுப்பப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை. இது ஒரு உள்நாட்டு  விஷயம் என்பதில் எங்கள் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீன அதிபரை சந்தித்தது பற்றி பேசப்பட்டது. ஆனால் விரிவாக இல்லை என கூறினார்.